குகன் சென்னியப்பன் இயக்கத்தில் சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘வெப்பன்’. வலையொளியாளரான வசந்ரவி தேனிக்கு செல்கிறார். அங்கு ஒரு சிறுவனை லோரி ஒன்று மோதுகிறது. அதில் தூக்கி வீசப்பட்ட அச்சிறுவனை அந்தரத்திலேயே பறந்தபடி பாதுகப்பான ஒரு இடத்தில் கண்ணுக்கு தெரியாத ஒரு சக்தி இறக்கிவிடுகிறது. இதை வசந்த் ரவி பார்த்துவிடுகிறார். கண்ணுக்குத் தெரியாத அந்த சக்தி படைத்த மனிதர் யார் என்பதை கண்டுபிடிப்பதுதான் கதை. அடுத்தடுத்து வரும் காட்சிகளை ஆவலுடன் எதிர்பார்க்குமளவுக்கு படத்தை திகிலுடன் காட்டியிருக்கிறார் இயக்குநர். சத்தியராஜின் அசால்ட்டான நடிப்பு மெச்சும்படியுள்ளது. வசந்த் ரவியின் கடினமாக உழைப்பை இப்படத்தில் காணமுடிகிறது. தான்யா ஹோப்புக்கு அழுத்தமான கதாபாத்திரம் அமையவில்லை. ஜிம்ரானின் இசை இடிமுழக்கத்துடன் அசரவைக்கிறது. படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது. ஆங்கிலப் படத்திற்கு இணையான ஒரு தமிழ் படம் “வெப்பன்”. குளிரூட்டும் திரையரங்கிலிருந்து, பார்வையாளர்கள் உடல் வெப்பம் தணியாமல் வெளிவருவார்கள்.