வேதா பிக்சர்ஸ் தியாகராஜன் தயாரிப்பில் செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி, ஹரிஸ் பிராடி, ஷிவானிநாராயணன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘பம்பர்‘. தூத்துக்குடியில் திருடனாக வாழும் வெற்றிபோலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்கிறார்கள். சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பும் வழியில்பம்பையில் இரவு தங்குகிறார்கள். அவர்களுக்கு பக்கத்தில் லாட்டரி சீட்டு விற்கும் முஸ்லீம் பெரியவர்ஹரிஸ் பிராடியும் தங்குகிறார். அவரிடம் பம்பர் லாட்டரி சீட்டு ஒன்று வாங்குகிறார் வெற்றி. பிறகுஅனைவரும் படுத்துக் கொள்கிறார்கள். காலையில் லாட்டரி விற்ற முஸ்லீம் பெரியவர் எழுந்துபார்க்கும்போது விற்ற லாட்டரி சீட்டு மட்டும் கீழே கிடக்கிறது. மற்றவர்களை காணவில்லை. எல்லோரும்ஊருக்கு திரும்பி இருக்கிறார்கள். கீழே கிடக்கும் தான் விற்ற லாட்டரி சீட்டை எடுத்துக் கொண்டுமுஸ்லீம் பெரியவரும் சென்று விடுகிறார். அந்த சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு கிடைக்கிறது. அந்த 10 கோடி யாருக்கு கிடைக்கிறது என்பதுதான் கதை. படத்தின் முற்பகுதியில் போலீசுக்கும் திருடனுக்கும்உள்ள ஒப்பந்த உறவு காவல்த்துறையை தூசு தட்ட வைக்கிறது. படத்தின் பிற்பகுதியில் இஸ்லாம்மார்க்கத்தின் கொள்கையை அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குநர் செல்வகுமார். வெற்றி திருடன்வேடத்திற்கு அழகாக பொருந்தி இருக்கிறார். கதையின் சாராசம்மத்தை உள்வாங்கி நடித்திருக்கிறார். வில்லனாக பார்த்த ஹரிஸ் பிராடி முஸ்லீம் பெரியவராக அசத்தியிருக்கிறார். *******