விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் ‘சைந்தவ்’

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கிறார்விக்டரி வெங்கடேஷ்சைலேஷ் கொலனு  நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் தயாராகும்சைந்தவ்படத்தின் பிரத்யேக காணொளியில், நாயகன் விக்டரி வெங்கடேஷ் தாடியுடன் கையில் துப்பாக்கி ஏந்தியபடி தோன்றுவதும்,  பின்னணியில் கார் வெடித்து சிதறுவதும்  ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. ‘சைந்தவ்படத்தின் டைட்டில் போஸ்டர், விக்டரி வெங்கடேஷ் அதிரடியாக நடிப்பதாகவும், தீவிரமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் குறிப்பிடுகிறது.**********

மேலும் இந்த காணொளியில் நாயகன் விக்டரி வெங்கடேஷ், சந்திரபிரஸ்தா என்ற கற்பனை நகரத்தில் ஒருமருந்துக் குப்பியைக் கொண்ட குளிர்பானப் பெட்டியுடன் துறைமுகப் பகுதிக்குள் நுழைகிறார், பின்னர் அவர்ஒரு கொள்கலனில் இருந்து துப்பாக்கியை வெளியே எடுக்கிறார். கடைசியாக, தன்னால் கடுமையாகதாக்கப்பட்ட குண்டர் குழுவை, பார்த்து எச்சரிக்கிறார். இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப்பெற்றிருக்கிறது.

படத்தின் தன்மை, தொனி மற்றும் வெங்கடேஷ் எந்த வகையான கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்பதைஇந்த காணொளியில் காட்சி படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட்டின் இரண்டாவது தயாரிப்பானசைந்தவ்‘,  நடிகர் விக்டரி வெங்கடேஷ் நடிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.