தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் மற்றும் கொடிப் பாடல் வெளியீட்டு விழா

32 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவை தனது பக்கம் கட்டி போட்டு படிப்படியாக உயர்ந்து தனக்கென தனி இடத்தை பிடித்து முத்திரை பதித்த விஜய் தனது அடுத்த நிர்வாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை துவங்கினார். கட்சியை துவங்கும் முன்னதாக பல்லாண்டுகளாக இயங்கி வந்த தனது ரசிகர் மன்றங்களை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். பின்னர் அது தற்போதுள்ள கட்சி யாக கட்டமைக்கப்பட்டது. கட்சியை துவங்குவதற்கு முன்னர் தனது இயக்கம் சார்பில் பல்வேறு நற்பணிகள் செய்து வந்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2022-ஆம் ஆண்டும், இந்த ஆண்டும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்களை அங்கீகரிக்கும் விதமாக  சான்றிதழும் ஊக்கத் தொகையும் அளித்து உத்வேகப்படுத்தினார்.

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் தலைவர் விஜய்  (22-08-2024) கழகக் கொடியை அறிமுகம் செய்து, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களிடையே சிறப்புரை ஆற்றினார்.