டிவியில் சட்டசபை நிகழ்வுக்களை பார்த்தால் நல்ல சினிமா படம் பார்ப்பது போல் உள்ளது – விஜய் சேதுபதி

தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் ‘ அம்மா உணவகத்தை ‘ சிலர் அடிச்சு நொறுக்குனப்போ கட்சிக்காரங்கனும் பார்க்காம அவங்களை கண்டிச்சு, தூக்கி உள்ளே போட்டது. 

* சட்டசபையில் எதிர்கட்சிக்காரர்களையும் பேச விடறது; அவங்க கேட்கிறதுக்கு இவங்க பதில் சொல்றது..இவங்க கேட்கிறதுக்கு அவங்க பதில் சொல்றது.

* ஸ்ககூல் பேக்-ல ஜெ. எடப்பாடி படம் இருந்துட்டு போகட்டும்; அவங்க படத்தை மறைக்கிறதுக்கு ஆகற 13 கோடி ரூபாயை மாணவர்கள் நலனுக்கு செலவு‌பண்ணலாமேனு  அன்பிலுக்கு முதல்வர் பதில் சொன்னது.

* கேட்கப்படுகிற கேள்விகளுக்கு அமைச்சர் பி.டி.ஆர் எழுந்து டக்..டக்..னு பதில் சொல்றது.

* தன்னைப் புகழ்ந்து பேசிய எம்.எல்.ஏ-க்களை கண்டித்து நேரத்தை வீணாக்க வேண்டாம்னு முதல்வர் கண்டித்து சொன்னது எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு.

* தயவு செய்து டி.வி-யில் போடற சட்டசபை நிகழ்ச்சிகளை எல்லோரும் பாருங்க. நல்ல படம்பார்க்கிற மாதிரி அவ்வளவு நல்லாயிருக்கு…”
                         – நடிகர் விஜய சேதுபதி