சுதன் சுந்தரம், ஜெகதீஸ் பழனிச்சாமி ஆகியோரின் தயாரிப்பில் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாரதிராஜா,அனுராக் காஷ்யாப், நட்டி நட்ராஜ், அபிராமி, சிங்கம்புலி, மினிஷ்காந்த் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். “மகாராஜா”. விஜய் சேதுபதி காவல் நிலையத்திற்கு வந்து என் வீட்டிலிருந்த இரும்பு குப்பைத் தொட்டியை காணவில்லை அதை கண்டுபிடித்துக் கொடுத்தால் ரூ. 7 லட்சம் தருவதாக இன்ஸ்பெக்டர் நட்டி நட்ராஜிடம் கூறுகிறார். அதற்கு ஆசைப்பட்டு அதே போல் வேறு ஒரு குப்பைத் தொட்டியை செய்து விஜய் சேதுபதியிடம் கொடுக்க வருகிறார் நட்டி நட்ராஜ். அந்த வெறும் காலி குப்பைத் தொட்டிக்குள் மறைத்திருக்கும் கதையின் கருப்பொருளை சுவாரசியத்தோடு சொல்லியிருக்கும் இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. அவ்வளவு அழகாகவும் கதையின் முடிவை யாரும் எதிர்பார்காத திருப்பத்துடன் இயக்கியிருக்கிறார். இதில் விஜய் சேதுபதியின் ஒவ்வொரு அசைவும் ரசிக்கும்படி உள்ளது. அவரின் உச்சி முதல் உள்ளங்கால் வரை ரகசியத்தின் தேடல் வியாபித்திருப்பதை காணமுடியும். விஜய்சேதுபதியின் தலைக்கு மற்றுமொறு மணி மகுடத்தை சூட்டியிருக்கிறார் இயக்குநர் நித்திலன் சாமிநாதன். உச்சக்கட்ட காட்சியில் நடிகர் சிங்கம் புலி வழக்கமான நகைச்சுவை நடிப்பிலிருந்து விலகி, தானும் ஒரு இயக்குநர்தான் என்பதை மெய்பித்துக் காட்டியுருக்கிறார். உயிர் பயத்தின் உச்சத்தை முகத்தில் காட்டியிருக்கிறார். அனைவரது நடிப்பையும் திரையில் ரசிக்க முடிகிறது.*********