“லைன் மேன்” திரைப்பட விமர்சனம்

வினோத் சேகர் மற்றும் தினகரன் பாபு ஆகியோர் தயாரிப்பில் உதய் குமார் மற்றும் வினோத் சேகர் இயல்கத்தில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், விநாயகராஜ், அருண்பிரசாத், தமிழ், அதிதி பாலன் ஆகியோரின் நடிப்பில் “ஆஹா” இணையதளத்தில் வெளிவந்திருக்கும் படம் “லைன் மேன். தூத்துக்குடி உப்பளப்பகுதி கிராமத்தில் மின்சாரத்துறை ஊழியராக வேலை பார்க்கிறார் சார்லி. அவரது மகன் ஜெகன் பாலாஜி தொழில் நுட்பத்துறை பொறியாளர். தெரு மின்சார விளக்குகள் சூரிய ஒளி மங்கியதும் தானாக விளக்கெறியவும், சூரிய ஒளி வந்ததும் தானாகவே தெரு விளக்குகள் அணையும்படியுமான ஒரு தானியங்கி கருவியை கண்டுபிடிக்கிறார் ஜெகன் பாலாஜி. இது நடைமுறைக்கு வராமலிருக்க மின்சாரத்தை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று தடையாக இருக்கிறது. இந்த தடையை மீறி ஜெகன் பாலாஜி தனது தானியங்கி கருவிக்கு அரசு அங்கீகாரத்தை பெற்றாரா? இல்லையா? என்பதுதான் கதை. இது தூத்துக்குடி உப்பளத்தில்  இன்றும் இதற்காக போராடிக்கொண்டிருக்கும் ஒரு பொறியாளரின் கசப்பான உண்மைக்கதை. அந்த கசப்புக்கு கொஞ்சம் தேன் கலந்து திரைக்கதையாக தந்திருக்கிறார் இயக்குநர் உதய்குமார். ஒரு தந்தைக்குரிய இலக்கணத்தை தனது இயல்பான நடிப்பால் வெளிபடுத்தியிருக்கிறார் சார்லி. பொறியளராக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஒப்பளத்து தொழிலாளியாக வரும் சரண்யா ரவிச்சந்திரன், தமிழ் ஆகியோரின் அரிதாரப்பூச்சில் அசல் ஏழைத் தொலிலாளிகளாகவே மாறியிருக்கிறார்கள். உப்பளத்தின் அழகை எழிலாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளரை பாராட்ட வேண்டும். இசை கேட்கும்படி உள்ளது. ஆட்சியராக வரும் அதிதி பாலனின் நடிப்பு பாராட்டும்படியுள்ளது.