“திரு.அன்புமணி அவர்களே வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு உரிமையில் உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களை ஆளுங்கட்சிக்கு வன்னியர் உரிமைக்காக பதவி விலகசொன்னேன். ஆனால் நீங்கள் செய்யவில்லை. தற்பொழுது நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தை எதிர்த்து அறிக்கை மட்டும் விட்டால் போதுமா? என்எல்சி பிரச்சனை காரணமாக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொல்லலாம். அப்போதுதான் வன்னியர் மக்களின் உணர்வுகளை மத்திய அரசும் மாநிலஅரசும் புரிந்து கொள்ளும். உங்களுக்கும் நான் சொல்வது புரியும். இது மாதிரி வெற்று அறிக்கை விட்டு வன்னிய மக்களை ஏமாற்றாதீர்கள். உடனடியாக சட்டமன்ற உறுப்பினர்களை பதவி விலக சொல்லுங்கள்.நம் வன்னியர்களின் உரிமை மீட்கப்படும்.ஆறு மாதம் கழித்து மீண்டும் உங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.இதை நீங்கள் செய்யவில்லை என்றால் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெறும் நாடகம் மட்டுமே.” இவ்வாறு மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடு வெட்டி குருவின் மகள் குரு.விருதாம்பிகை கேள்வி எழுப்பியுள்ளார்.