கிராம விழாவை தொடங்கி வைத்த விஷால், “விவசாயிகளுக்காக நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன். விவசாயி ‘சேற்றில் கால் வைத்தால் தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும்!’ என்பது உண்மையானது. என்னுடைய திரைப்படங்களுக்கு திரையரங்குகளில் விற்பனையாகும் டிக்கட்டுகளில் ஒரு டிக்கட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வருகிறேன். கல்வியால் எப்போதும் இந்த உலகத்தை ஆள முடியும், அந்த கல்விக்காக நான் யாரிடமும் பிச்சை எடுக்க தயங்கியது கிடையாது. எனக்காக இல்லை, படிக்க முடியாத எத்தனையோ மாணவ, மாணவியர்களுக்காகத்தான். எனது தேவி அறக்கட்டளை மூலம் பல மாணவ, மாணவியர்களை படிக்க வைத்து வருகிறேன். போற்றுவோம் விவசாயத்தை, காப்போம் விவசாயியை..!! இது போன்ற விவசாயம் போற்றும் நிழச்சிகள் அனைத்து மாவட்டங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்” எப்று கூறினார்.