விஷால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல் – இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்

விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்குசென்சார் சான்றிதழ் மும்பையில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கியவிஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்க பாரத பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வருக்கு தெரியப்படுத்தி வேண்டுகோள் வைத்தார், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்கள்.*******

இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில்அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும்தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே பெற்றுகொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களுக்கு மும்பை சென்று CBFC யை அனுகவேண்டிய அவசியம்இல்லை தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயேசென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸ்க்கும்இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.