*’ஜோ’ படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடந்தது

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள  ஜோபடத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில்  நடந்தது.  விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து பேசியதாவது, “15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை எட்டு முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறைபார்க்கும் பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது“.******

இயக்குநர் ஹரிஹரன், ” இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்தஅனைவருக்கும் நன்றி. 2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடியபடத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்றுவரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி“.