சாக்‌ஷி அகர்வால், விஜய் விஷ்வா நடிக்கும் படம் ‘சாரா’

விஷ்வா ட்ரீம் வெர்ட் நிறுவனம்  சார்பில் ஆர். விஜயலக்‌ஷ்மி மற்றும்  செல்லம்மாள்குருசாமி ஜி தயாரிப்பில்,  இயக்குநர் ரஜித் கண்ணா இயக்கத்தில் நாயகி சாக்‌ஷி அகர்வால் மற்றும் நாயகன் விஜய் விஷ்வா  இணைந்து நடிக்கும்சாராதிரைப்படம் படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள  பூஜையுடன் துவங்கியது. இவ்விழாவினில் இளையராஜா கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். யோகிபாபு ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், பொன்வண்ணன், அம்பிகா, ரேகா நாயர்ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர்.*******

இயக்குநர் ரஜித் கண்ணா அவர்கள் பேசியதாவதுஒரு இக்கட்டான சூழலில், தனக்காக எல்லாவற்றையும் விட்டு வந்த காதலனையா ? அல்லது தனக்காகவாழ்க்கையே தியாகம் செய்த  நண்பனையா ? நாயகி யாரை காப்பாற்றுகிறாள் என்பதே இப்படம். கட்டிடங்கள்கட்டப்படும் பின்னணியில் இப்படத்தின் கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது, பல சண்டைக்காட்சிகளுடன்அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் படமாக இப்படம் இருக்கும். விஜய் விஷ்வா நாயகனாக நடிக்கிறார். இந்ததிரைப்படத்தில் யோகிபாபு, ரோபோசங்கர் ஆகியோர்  முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். கண்டிப்பாகநல்ல அனுபவம் தரும் படமாக இப்படம் இருக்கும், நீங்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும். பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றி.

தொழில் நுட்ப குழு விபரம்: தயாரிப்பு – Viswa Dream World தயாரிப்பாளர்  R விஜயலக்‌ஷ்மி மற்றும்  செல்லம்மாள்குருசாமி G  நடிகர்கள்சாக்‌ஷி அகர்வால், விஜய்விஷ்வா,  பொன்வண்ணன், அம்பிகா,  யோகிபாபு ரோபோ சங்கர். இயக்குநர்ராஜித் கண்ணா ஒளிப்பதிவு – J. லக்ஷ்மன் எடிட்டர் – SP அஹமத்.  இசைகார்த்திக் ராஜா கலை இயக்குனர்சுரேஷ் கல்லெறி சண்டை பயிற்சியாளர்மிரட்டல் செல்வா பாடலாசிரியர்சினேகன், அருண் பாரதி தயாரிப்பு மேலாளர்சுந்தரம் சிவம் புகைப்படம்சுரேஷ் ஆடை வடிவமைப்புராஜன் மேக்கப்கரி சுல்தான் மக்கள் தொடர்பு – A ராஜா