திருநெல்வேலி மாவட்டம் திருப்பணி கரிசல்குளத்தைச் சார்ந்த இளம்பெண் சந்தியா (வயது 18) என்பவர்நேற்று கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இராஜேஷ் கண்ணன் என்பவர் சந்தியாவைஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும் தன்னுடைய காதலை சந்தியா ஏற்க மறுத்ததாகவும் தெரியவருகிறது. இதனால் விரக்தியடைந்த இராஜேஷ் கண்ணன் ஆத்திரப்பட்டு சந்தியாவை அவர் வேலை பார்த்து வந்தகடையில் வைத்தே வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.
இராஜேஷ் கண்ணன் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீதான வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனை கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென அரசைவலியுறுத்துகிறோம். பாதிக்கப்பட்ட சந்தியா அவர்களின் குடும்பத்தினருக்கு எஸ்சி / எஸ்டி வன்கொடுமைதடுப்புச் சட்டத்தின்படி அரசு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரஅரசுப் பணி ஆகியவற்றை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
தென் மாவட்டங்களில் தொடரும் சாதியப் படுகொலைகளையும், பெண்களுக்கு எதிரானவன்கொடுமைகளையும், மாணவர்களுக்கு இடையே ஏற்படும் சாதிய மோதல்களையும் தடுத்து நிறுத்திடும்வகையில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
அத்துடன், சாதிவெறி – மதவெறி தாக்குதல்களை தடுத்திடும் வகையில் தனி நுண்ணறிவுப் பிரிவு ஒன்றைஉருவாக்கிட வேண்டும் என்கிற எமது நீண்ட நாள் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம்.