யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படம் விரைவில் வெளியாகிறது

வினிஷ் மில்லினியத்தின் இயக்கத்தில், வாமா எண்டர்டெய்மெண்ட் சார்பில்  ஜாஹிர் அலியின் தயாரிப்பில் மற்றும் சரவணா ஆர்ட்ஸ் இணை தயாரிப்பில்  நடிகர் “யோகி பாபு” இது வரை ஏற்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படத்தின் பதாகையை  நடிகர் விஜய் சேதுபதி   மற்றும் சக்தி ஃப்லிம் பேக்டரி சக்திவேலன்  ஆகியோர் வெளியிட்டனர். மது அம்படின் ஒளிப்பதிவில், எஸ்.என். அருணகிரியின் இசையில்,  யோகி பாபுவின் திரை பயணத்தில் இத்திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின்  வேலைகள் கிட்டதட்ட முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் படம் வெளிவரவுள்ளது. நடிகர்கள்: ஹரிஸ் பேரடி, விக்ரம் புகழ் வாசந்தி, ஜாஹிர் அலி, மணிமாறன். சாந்தி தேவி, மேனகா, நைரா, அருவி பாலா, மூர், ‌‌ஶ்ரீதர். ஆகியோர் நடித்துள்ளார்கள்.******