வெங்கி இயக்கத்தில் சதிஷ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நடைபெற்றதுஇயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் ரவீந்திரன், தயாரிப்பாளர் லலித், தயாரிப்பாளர் மதன், பி.வி.ஆர். சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷாதமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் வெங்கிஎன்பது குறிப்பிடத்தக்கதுஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன் 3″ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்க, சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆனந்தராஜ், ஜான்விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.********

யுவா ஒளிப்பதிவை மேற்கொள்ள VBR இசையமைக்கிறார் இணை தயாரிப்புமுரளி கிருஷ்ணன் படத்தொகுப்புசித்தார்த் கலை இயக்குனர் – G.துரைராஜ் காஸ்டியூம் டிசைனர்கிருத்திகா சேகர் மக்கள் தொடர்புசதிஷ்சதிஷ் குமார் (AIM) பப்ளிசிட்டி டிசைன்ஸ்தண்டோரா இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்