சென்னை பெருநகரில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சென்னை பெருநகர காவல்துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச் சியாக பெண்கள் இந்திய வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (WICCI) மற்றும் மகேஸ்வரா மருத்துவ கல்லூரி, ஐதராபாத் இணைந்து, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு வரும் சென்னை பெருநகர காவல்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக முகக்கவசங்களை வழங்க
முன்வந்தனர். அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., 24.8.2020 அன்று காலை, காவல் ஆணையரக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சயில், மேற்படி அமைப்பினர் வழங்கிய 1,000 எண்ணிக்கையிலான N-95 ரக முகக்கவசங்களை, WICCI அமைப் பின் தலைவர், வர்ஷா அஸ்வானி முன்னிலையில் காவல் ஆளிநர்களுக்குவழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் (தலைமையிடம்) ஏ. அமல்ராஜ்,இ.கா.ப., துணை ஆணையாளர்கள் ஆர்.திருநாவுக்கரசு,இ.கா.ப., (நுண்ணறிவுப்பிரிவு), பெரோஸ்கான் அப்துல்லா,இ.கா.ப., (நிர்வாகம்), எம்.சுதாகர் (நுண்ணறிவுப்பிரிவு), எஸ்.விமலா, (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் மேற்படி அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.