பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ரேச்சல் உள்ளிட்டப் பலரது நடிப்பில் செப்டம்பர்1 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘லக்கிமேன்’. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் யோகிபாபு பேசியதாவது. “இயக்குநர் பாலாஜி சொன்னதுபோல என்னுடைய வாழ்வை திரும்பி பார்ப்பது போலதான் இருந்தது. இதற்கு முன்பு நான் நடித்த சிலபடங்களில் நாலஞ்சு சீன் என்னை வைத்து எடுத்து விட்டு ஏன் போஸ்டர் போடுகிறீர்கள் எனக் கேட்டேன். அது ரசிகர்களையும் ஏமாற்றுவது போலதானே? அதைக் கேட்டால்தான் அனைவருக்கும் பிரச்சினை. நான் ஷூட்டிங் வரமால் எங்கு போவேன்? என்னைப் பற்றி வரும் செய்திகள் எல்லாம் சும்மா. நான் கதை கேட்டு படம் பண்ணுவதை விட அவர்களின் கஷ்டத்தைக் கேட்டுதான் படம் செய்வேன். என்றார்.********
இயக்குநர் பாலாஜி வேணுகோபால் பேசியதாவது, “இதற்கு முன்பு நான் ‘பானிபூரி’ என்ற குறுந்தொடர் இயக்கி இருந்தேன். அதற்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி. யோகிபாபுவை பார்த்து கதை சொன்னதும்அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அவர் வாழ்க்கையை திரும்பி பார்ப்பது போல உள்ளது என உடனேநடிக்க ஒப்புக் கொண்டார். அவரை தமிழ் நடிகர் என சொல்வது குறைவு. இந்திய நடிகர் என சொல்லும்அளவுக்கு திறமையானவர். அவரைப் பற்றிய பல தவறான புரிதல்கள் நிச்சயம் நீங்க வேண்டும். அவர் வீட்டில்ஒருவருக்கு மெடிக்கல் எமர்ஜென்சி எனும் போது கூட ஷூட்டிங் வீணாகக் கூடாது என அந்த கஷ்டத்தைமறைத்து எங்களுக்கு நடித்துக் கொடுத்தார். என்னுடைய உதவி இயக்குநர்களுக்கு நன்றி. அவர்கள் எனக்குஉதவிய இயக்குநர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் மட்டுமில்லாது தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றினர். ஷான் ரோல்டன் என்றாலே ட்யூன் தான். சிறப்பாக செய்துள்ளார். சுஹாசினி சின்னரோலாக இருந்தாலும் எனக்காக நடித்துள்ளார். படத்தை வெளியிடும் சக்தி சாருக்கு நன்றி. நண்பர்கள், குடும்பத்தினர் கொடுத்த ஆதரவுக்கு நன்றி”.