யுவர் பேக்கர்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணராஜ் தயாரித்து, நடித்த “மனிதம்” திரைப்படம் கடந்த மார்ச் 7ஆம் தேதி புதுவை மற்றும் தென்னாற்காடு மாவட்ட திரை அரங்குகளில் வெளிவந்தது. படத்தை ஜாலி ஹோம்ஸ்9 எனும் ஆதரவு இல்லம் நடத்திவரும் புருனோ இயக்கியுள்ளார், தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த்தேவா இசையமைத்துள்ளார். ஒரு மனிதனின் எதிர் பாராத மரணம் அதனால் அவரின் குடும்பத்தில் ஏற்படும் இழப்பு மற்றும் தவிப்பு மேலும் அவரை பற்றிய சமூகத்தின் பார்வை, உறவுகளின் உண்மை மற்றும் போலி நடிப்பை எதார்த்தமாக படம்பிடித்து காண்பித்துள்ளார். மாணவர்கள் ஆசிரியர் மீதுள்ள பாசம், தந்தையின் மரணத்தால் செய்வதறியாது தவிக்கும் மகளின் நடிப்பு காண்பவர்களின் கண்கள் குளமாகின்றது கண்ணீரால். விறுவிறுப்பு, குத்தாட்டம் நோக்கி திரைக்கு பயன்படும் மக்களுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னையும், தன் குடும்பத்தையும் எண்ணி பார்க்க எதிர்காலத்தை வகுக்க ஒரு சிறந்த பாடமாக அமைந்துள்ளது. மக்களின் ஆதரவை கண்டும், பள்ளி மாணவர்களின் தேர்வை மனதில் கொண்டும் ஏப்ரலில் தமிழகமெங்கும் திரையிட திட்டமிட்டு இருக்கின்றது யுவர் பேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம்
“மனிதம்” திரைப்படம்
