எவர்கீரின் ஸ்டார் மீனா நடிக்கும் அசல் இணையதள தொடரான “Karoline Kamakshi” ஆட்டோ சங்கர், திரவம், பிஃங்கர் டிப், போஸ்ட் மேன், போன்ற வெற்றிகரமான தொடரை அடுத்து ZEE5 யின் அடுத்த அதிரடி படைப்பு, எவர்கிரீன் ஸ்டார் மீனா, ஜார்ஜியா அன்ட்ரியானா, ஒய்ஜி மகேந்திரன், திலீபன், அன்டோ தாமஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் “Karoline Kamakshi”. விவேக் குமார் கண்ணன் இயக்கத்தில், TrendLoud புகழ் சிதம்பரம் நடேசன் தயாரிப்பில் “Karoline Kamakshi”. Trend Loud ன் பத்தாவது தொடரான கரோலின் காமக்ஷியின் தொடக்ககாட்சிகள் வருகிற டிசம்பர் 5ம் தேதி முதல் ZEE5 யில் பிரத்தியேகமான முறையில் உங்கள் பார்வைக்கு!
எவர்கிரீன் ஸ்டார் மீனா முதன்முதலாக டிஜிட்டலில் அறிமுகமாகும் தொடரான “Karoline Kamakshi” யில் பாலிவுட் டிவா ஜார்ஜியா அன்ட்ரியானா வுடன் சேர்ந்து நடித்துள்ளார். இந்த தொடர் Karoline என்று சொல்லக்கூடிய பிரஞ்சு டிடெக்டிவ் மற்றும் பாரம்பரியமான தமிழ் பிராமண பெண்ணான Kamakshi, எவ்வாறு போதைமருந்து கடத்தல்காரரான பர்கினை பிடிக்க முயல்கிறார் என்பதை சுவாரஸ்யமாக சொல்வதே இத்தொடரின் கதை.
இத்தொடரில் நடித்தது பற்றி நடிகை மீனா கூறுகையில்: கரோலின் காமக்ஷி அனைத்து விதமான ரசிகர்களும் பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஆக்ஷன், ட்ராமா எனக் கலந்து, இத்தொடர் பொழுதுபோக்கு அம்சமாக அமைந்துள்ளது. ஆகையில் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. கரோலின் காமக்ஷி தொடரில் வேலை செய்த அனைவரும் மிகவும் சுறுசுறுப்பாகவும், எனர்ஜிட்டிக் ஆகவும் வேலை செய்தார்கள். ZEE5 யில் வெளிவரவிருக்கிற “Karoline Kamakshi” க்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
இத்தொடரின் இயக்குனர் விவேக் குமார் கண்ணன் கூறுகையில்: Karoline Kamakshi ஒரு சிறப்பான தொடராக பிராம்மாண்டமான விதத்தில் உருவாகியுள்ளது. சூப்பர் ஹிட் தொடராக அமையக்கூடிய அனைத்து அம்சங்களும் கரோலின் காமக்ஷி க்கு உள்ளது. தனிப்பட்ட முறையில் சூப்பர் ஸ்டாரான, திறமைமிக்க நடிகை மீனாவுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த வாய்ப்பை எனக்களித்து மிகவும் பக்கபலமாக இருந்த Trendloud நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். ZEE5யின் Karoline Kamakshi நிச்சயமாக பெரிய அளவில் டிஜிட்டல் தளத்தில் அனைத்து மக்களையும் வந்தடைந்து மாபெரும் வெற்றிபெறும்.
இந்த தொடர் பற்றி அபர்னா ஆசேரக்கர், ZEE5 Programming Head, கூறுகையில்: Karoline Kamakshi அனைவரும் பார்த்து மகிழக்கூடிய ஒரு சுவாரஸ்யமான தொடராக வெளிவரவிருக்கிறது. இக்குழு மிகவும் சிறப்பான வேலையை செய்திருக்கிறது. இதில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் Karoline Kamakshi யின் தயாரிப்பு குழு தனிச்சிறப்புடைய செயலை செய்துகாட்டியிருக்கிறது. இது நிச்சயமாக தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெறும். சென்னைதான் எங்களின் முக்கிய சந்தையாக காணப்படுகிறது. அதற்கேற்றவாறு, இன்னும் வேறு பல புதிய உள்ளடக்கங்கள் கொண்ட இணையதள தொடர்களை வெளியிடும் வேலையில் ஈடுபட்டுள்ளோம்.